" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்."

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.

கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன்.

ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன்.

நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன்.

இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.

எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன்.

எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன்.

புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல்.

எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !