உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

என்னைப் பற்றி


வணக்கம் தோழர்களே !

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். எனது இயற்பெயர் விஜயலட்சுமணன். மதுரை மாவட்டம் கிருட்டிணாபுரம் என்னும் ஊரில் சங்கர்ராமு-பாக்கியம் தம்பதிக்கு 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி நவம்பர் 25) பிறந்தேன்.

கிருட்டிணாபுரத்திலுள்ள ஆரம்பக்கல்வியில் மூன்றாம் வகுப்பு வரையிலும், பின் சிவகாசி ரிசர்வ்லைனிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், பின் மறுபடியும் மதுரை சேடபட்டியில் பத்தாம் வகுப்பு வரையும் எனது பள்ளிக் கல்வி முடிவுற்றது. பத்து வயதிலிருந்தே கதை, கவிதை, கட்டுரைகள் படிப்பதற்கான ஆர்வம் மேலோங்கியது. தமிழும் தமிழ் சார்ந்த பாடங்களில் நன்றாக படித்து வந்தேன்.

பள்ளிக் கல்வி முடிந்தது காஞ்சியிலுள்ள பக்தவத்சலம் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் 2000 ஆம் ஆண்டு பட்டயம் பெற்றேன். கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் பெங்களூர் வந்தேன், தற்போது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் செயலி பொருளாளனாய் பணிபுரிந்து வருகிறேன்.

கவிதைகள்:

ஊற்றெடுக்கும் அருவி போலல்லாமல் அவ்வப்போது மனங்களில் வழிந்தோடுகின்ற எண்ணவோட்டங்களைத் தொகுத்து அழகான வரிகளினாலும், வார்த்தைகளினாலும் அணிசெய்து இங்கே சிலவைகளைப் பதிவேற்றியிருக்கிறேன். அவைகளை தாங்கள் படித்து தாங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.


* தமிழர் திருநாள் * உலகம் எங்கே செல்கிறது ? * அன்புள்ள அப்பா
* தவிப்புடன் * கவிதையல்ல... * பெரியார் * காத்திருக்கிறேன்... ! * புண்பட்ட வெண்புறா ! * முங்காறு மழே...! * வானவில் ! * கண்ணெதிரே...தோன்றினாள் * திருமண வாழ்த்து... * யார் அவள் ? * 'பிரிய'மானவளே * பெண் ஒன்று கண்டேன் * தோழி அவள்(!) * எவ்வளவு பேராசை ! * இனிமையே இனிமையாய் * எய்ட்ஸ் தமிழ்ப்புத்தாண்டு * தெரியுமா உனக்கு * வாழ்த்துக்கள்

பயணங்கள்

நாம் படிக்கின்ற புத்தகங்களுக்கு இணையானதும் மேலானதுமாக படிக்கின்றவைகளைப் அனுபவமாய்ப் பெறுகின்றவைகளாக பயணங்கள் அமைகின்றன. அவ்வகைப் பயணங்களில் மாறுபட்ட மனிதர்கள், வழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு எனப் பலவற்றை நாம் காணும், சந்திக்க நேரிடும் அனுபவமுண்டு. அவ்வகையான பயண அனுபவங்களைப் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தற்சமயம் எனது அமெரிக்க பயண அனுபவங்களை வெவ்வேறு பாகங்களாக பகிர்ந்துள்ளேன். எனது பயணத்தில் நீங்களும் பங்குகொள்ளும் உணர்வை அளிக்கிறதா என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

"விமான பயணங்கள்" "டெட்ராய்ட் நகரம்" "அனுபவம் புதுமை"
"நியூயார்க் நகரம்" "காலச்சுதுரம்" ”இரவுநேர நியூயார்க்' ”சுதந்திரதேவி சிலை
"எம்ப்யர் ஆவல்"


கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றில் எழுதும் ஆர்வம் அதிகமிருந்தாலும் அலுவலகப் பணிகளுக்கிடையையேயும் மற்ற பணிகளுக்கிடையேயும் கிடைக்கும் நேரத்தை செலவிட்டு எனது கருத்துக்களையும், கட்டுரைகளையும், சமயங்களில் கவிதையையும் பதிவிட்டு வருகிறேன். எனது படைப்புகளின் உங்களின் விவாதங்களை தெரிவியுங்கள். மேலும் மெருகூட்டுவதற்கான தகவல்களையும் தயங்காமல் அளிக்கவும் வேண்டுகிறேன்.

எனது நண்பர்கள், வாசகர்கள் “என்னைப் பற்றி” எனும் இப்பகுதியில் தாங்களின் மேலான கருத்துக்களையும், எண்ணங்களையும் தெரிவிக்க வேண்டுகிறென்.

மீண்டும் சந்திப்போம்..

வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.
+91 97409 84705

மடல் முகவரி : nilavan@nilavan.net
வலை முகவரி : www.nilavan.net

14 மறுமொழிகள்:

Anonymous Tue Apr 28, 07:34:00 PM  

Just don't copy other's creativity. All the best.

Anonymous Tue Apr 28, 07:37:00 PM  

//செயலி பொருளாளனாய் பணிபுரிந்து வருகிறேன்//

What is the meaning?

Ops16 Wed Apr 29, 01:51:00 AM  

மிக்க நன்றி..

காப்பியடிப்பது பெருமைக்காக அல்ல தோழரே.. நான் படித்த செய்திகளை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தினால் தான்..

Anonymous Sat May 02, 12:15:00 PM  

Well, if the intent is spread awareness for one's writing, you could have given short preview and link to that blog. Not doing a cut and paste of entire article without credits. That would be construed as copyright violation.

Nilavan Sat May 02, 02:17:00 PM  

ஈ மெயில்களில் வரும் கட்டுரைகளுக்கு லின்ங் கொடுப்பதற்கில்லை.. இருப்பினும் தாங்களின் அறிவுரையை கவனத்துடன் கையாள்கிறேன் தோழரே..

K.Manoj Wed May 20, 04:56:00 AM  
This post has been removed by a blog administrator.
இனியவன் Wed Jul 08, 02:18:00 PM  

sir see my blog www.ineeya.blogspot.com
promote my blog.........

Nilavan Sat Jul 11, 12:48:00 PM  

தாங்களின் வலைப்பூவை எம்மாதிரியாக மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லுங்கள். செய்து தருகிறேன்.

ஹிப்ஸ்... Sat Jul 11, 08:32:00 PM  

வாழ்த்துக்கள் மேலும் வளர...

drkarna Thu Sep 17, 01:48:00 PM  

U GOTTA GREAT STUFF,BUT WRITE UR OWN VIEWS,INSTEAD OF OTHERS,U CAN WRITE ABOUT SOCIO ECONOMIC PROBLEM,IN UNDER DEVELOPED COUNTRIES, LIKE AFRICAN CONTINENT ISSUES LIKE FAMINE,EDUCATION,ASSASSINATIONS, GENOCIDES IN RUSSIAN COUNTRY, ALL OUR RESTRICTING THEIR VIEW WITH IN TAMIL NADU,I AM EXPECTING MRE FROM U WITH BROAD MIND APPROACH,BCZ ALL HUMAN BEINGS ARE SAME,PAIN AND PROBLEMS SAME FOR ALL.MY NO IS 09176667425

drkarna Thu Sep 17, 01:54:00 PM  

just take ur view on, world class movies like iranian,spanish,award winning and which gives pain to the heart, lot of movies are there, i think u can work on that,instead of working on our tamil flim itself,u can give best view on best novels and books,which is internatinally well recognised one,if possible u can include some iteresting thing in science,in that i can help u...........i am expecting some chang

Nilavan Thu Sep 17, 05:15:00 PM  

உங்கள் கருத்துக்கும், அறிவுரைக்கும் மிக்க நன்றி கருணா..

நேரங்களைச் செழிப்பாகச் செலவிட்டு செய்ய வேண்டிய காரியமது. முடியுமா எனத் தெரியவில்லை.. முயற்சிக்கிறேன்.

தமிழன் Thu Oct 01, 06:56:00 PM  

செயலி பொருளாளன் என்பதன் பொருள் என்ன ???

Nilavan Sun Oct 04, 07:40:00 AM  

// செயலி பொருளாளன் என்பதன் பொருள் என்ன ? //

Sysmtems Engineer எனச் சொல்லலாம்..

திரட்டிகள்

Tamilish More than a Blog Aggregator :: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines ulavu.com Add to your blog